Home சினிமா செய்திகள் ரஜினிகாந்த் முன் நடிக்க பயந்தேன்: சவுபின் சாஹிர்

ரஜினிகாந்த் முன் நடிக்க பயந்தேன்: சவுபின் சாஹிர்

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அக்.14-ல் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சவுபின் சாஹிர், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

“முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் முன்னால் நடிப்பதற்குப் பயந்தேன். பிறகு அதை அவர் சகஜமாக்கினார். அவர் எளிமையும் ஸ்டைலும் வியக்கவைத்தன. உடை மாற்றவும் சாப்பிடவும் மட்டுமே அவர் கேரவனுக்குச் செல்வார். மற்ற நேரங்களில் படப்பிடிப்பைத்தான் கவனித்துக் கொண்டிருப்பார். அவர் அப்படி இருந்தது எங்களைப் போன்றவர்களுக்குப் பெரிய எனர்ஜியை கொடுத்தது” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version