“கமல்ஹாசனை இயக்க ஆசை…” – ‘தக் லைஃப்’ பார்த்த இயக்குநர் அமீர் விருப்பம்

0
164

மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடித்த திபை்படம் ‘தக்லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குளில் இப்படம் வெளியானது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள குரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை நடிகரும், இயக்குநருமான அமீர் பார்த்தார். பின்னர் அவர் கூறியது: “40 ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில்தான் பார்ப்பேன். சரியான நேரத்தில் சரியான மனிதர்கள் பக்கம் நிற்பதுதான் கடமையாக எண்ணுகிறேன்.

இப்படத்தில் மொழி குறித்து ஏதும் அவர் தவறாக பேசவில்லை. காவிரி நீர் குறித்தும் கன்னட மொழி குறித்தும் தவறாக பேசவில்லை. திராவிட குடும்பத்தின் அன்பைப் பற்றியும் இணக்கத்தை பற்றியே பேசினார். கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது. முடியுமா? என்று அவரிடம் கேட்டு சொல்கிறேன். இரண்டு மூன்று முறை அந்தப் பணி நிமித்தமாக பேசினோம். ‘வடசென்னை 2’ அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. ஆகஸ்ட்டில் இருந்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் தொடங்கும்” என்றார் அமீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here