“நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்” – ஆயுஷ்மான் குர்ரானா பகிர்வு

0
12

நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக அண்மையில் பாலிவுட் சினிமா நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தெரிவித்தார். இது பேசுபொருளாகி உள்ளது.

“எனக்கு தூங்குவது ரொம்பவும் பிடிக்கும். நாம் அதிகம் நேசிப்பவர்கள் தூங்க செய்ய வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். தூக்கத்தில் இருக்கும் ஒருவரை எழுப்புபவர் எதிரிக்கும் சமம். விடுமுறையை கொண்டாடுவதற்கு முன்பு நல்ல தூக்கம் தேவை. இதை நான் எல்லோருக்கும் அறிவுரையாக சொல்வேன்.

நான் எப்போதும் எனது தூக்கத்தை முழுமையாக நிறைவு செய்ய மாட்டேன். நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். அதேநேரம் என்னுடைய விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவேன்” என ஆயுஷ்மான் குர்ரானா தெரிவித்தார்.

தூக்கம் குறித்து நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் இந்த சமூக வலைதளத்தில் விவாதமானது. சிலர் இதை தங்களுடன் பொருத்தியும், சிலர் இதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here