நடிகர் சூரி, ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது.
அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரில் கட்டிட வேலை நடந்து வருகிறது. ஒருவர் சுவரில் தொங்கியபடி பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்துள்ள சூரி, ‘விடாமுயற்சி’ பாடலுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். நடிகர் சூரி, சினிமாவுக்கு வருவதற்கு முன் பெயின்டராக வேலை பார்த்தார். அதை இப்போது நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.














