“நான் கிரிக்கெட்டை விட வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை” – ஸ்மிருதி மந்தனா

0
16

 நான் கிரிக்கெட்டை விட வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்​சல் இடையிலான திருமணம் ரத்து ஆனது. இதை அண்மையில் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் ரத்து ஆனது. இந்நிலையில், கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார் ஸ்மிருதி. இலங்கை அணி உடனான மகளிர் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.

“கிரிக்கெட்டை விட நான் வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என நினைக்கிறேன். இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும். நமது பிரச்சினைகள் அனைத்தையும் நாம் புறம் தள்ளிவிட்டு, அந்த எண்ணம் மட்டுமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது.

சிறு பிள்ளையாக இருந்த போது பேட்டிங் மீதான ஆர்வம் எனக்கு வந்தது. அது எனக்குள் இப்போதும் அப்படியே உள்ளது. உலக சாம்பியன் என்று அறியப்படவே விரும்புகிறேன். எங்களது இத்தனை ஆண்டுகால போராட்டத்துக்கான வெகுமதியாக உலக கோப்பை வெற்றியை கருதுகிறேன்.

உலகக் கோப்பைக்காக நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். அதற்காக நான் 12 ஆண்டுகள் விளையாடினேன். இறுதிப் போட்டிக்கு முன்பே உலகுக் கோப்பை வெற்றி எப்படி இருக்கும் என கற்பனை செய்திருந்தோம். உலகக் கோப்பை வெற்றி எங்களுக்கு மட்டுமல்லாது எங்கள் சீனியர்களுக்கும் பெருமை சேர்த்தது” என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here