“யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” – கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து

0
11

கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், எல்​.​முரு​கன் ஆகியோர் நேற்று ஆறு​தல் கூறினர். மேலும், சம்​பவம் நடை​பெற்ற வேலுசாமிபுரத்​துக்கு சென்று பார்​வை​யிட்​டனர்.

பின்​னர், ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்​கும் ஆறு​தல் கூறு​வதற்​காக பிரதமர் மோடி எங்​களை இங்கு அனுப்பி வைத்​தார். அதன்​படி, பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறினோம். இதில் பலர் பேசக்​கூட முடி​யாத அளவுக்கு துக்​கத்​தில் உள்​ளனர். இதில் பெரும்​பாலானவர்​கள் ஏழை மக்​கள்.

இந்த சம்​பவத்​தில் எந்த கட்​சி​யை​யும் குறிப்​பிட்​டுப் பேச விரும்​ப​வில்​லை. யாரை​யும் குற்​றம் சாட்​ட​வும் விரும்​ப​வில்​லை. நாட்​டில் இது​போன்ற சம்​பவம் இனி எங்​கும் நிகழக் கூடாது. இங்கு பார்த்த விஷ​யங்​களை பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்ஷா ஆகியோரிடம் தெரி​விப்​போம்.

உயி​ரிழந்​தோர் குடும்​பத்​துக்கு தலா ரூ.2 லட்​சம், காயமடைந்​தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்​கப்​படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதற்​காக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரின் வங்​கிக் கணக்கு உள்​ளிட்ட விவரங்​களை அளிக்​கு​மாறு மாவட்ட நிர்வாகத்​திடம் கேட்​டுள்​ளோம். அவர்​களும் உடனடி​யாக அனுப்​புவ​தாக தெரி​வித்​துள்​ளனர். இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரிவித்​தார். பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், வானதி சீனி​வாசன் எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here