Home தேசிய செய்திகள் அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

அமெரிக்காவின் சாதாரண வாழ்க்கை வேண்டாம்: இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி

0

அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும் அவருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை போட்டு புகழ் பெற்று வருகிறார் பிஷர். அவரது வீடியோக்களை பலரும் ஷேர் செய்து ரசித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிறிஸ்டன் பிஷர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறும்போது, “அமெரிக்காவில் நான் வசிக்கும்போது சந்தோஷமாகத்தான் இருந்தேன். அங்கிருந்த வாழ்க்கை வசதியாக இருந்தது. ஆனால், போகப் போக அந்த சாதாரண வாழ்க்கை எனக்கு அலுப்புத் தட்டி விட்டது.

அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கையை விட்டு விட்டு, இந்தியாவில் அசாதாரண வாழ்க்கையை வாழ விரும்பினேன். அதனால்தான் இங்கு குடியேறிவிட்டேன். இது எனது வாழ்க்கையை மாற்றும் நடவடிக்கையாக இருந்தது.

நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்? என் வாழ்க்கையை எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கட்டுப்பாட்டில் இருந்தது. அமெரிக்காவில் சராசரி வாழ்க்கையை நான் தேர்வு செய்யலாம் அல்லது தைரியமான மற்றும் அசாதாரணமான ஒன்றைச் செய்ய நான் தேர்வு செய்யலாம்.

எனவே, இந்தியாவில் வசிக்க முடிவு செய்து நாங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தோம். அதற்காக நாங்கள் சிறிதும் வருத்தப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் நான் சில அற்புதமான மக்களைச் சந்தித்தேன். சில நம்பமுடியாத இடங்களைப் பார்த்தேன், சில அற்புதமான உணவை சாப்பிட்டேன். என் மனதை என்றென்றும் மாற்றினேன். இந்தியா என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டது.

நான் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டேன். உங்களுக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதை எப்படி வாழ்வீர்கள்?” என்றார். அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version