“நான் காப்புரிமை கேட்பதில்லை” – தேவா சொன்ன காரணம்!

0
62

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னை காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை” என்று தேவா கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் தேவா இசையில் வெளியான ‘கரு கரு கருப்பாயி’ பாடல் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த பாடல் யூடியூப், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் பயங்கர வைரல் ஆகிவிட்டது. அதே போல ‘வாழை’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் ‘பஞ்சுமிட்டாய் சேலைகட்டி’ பாடலும் பயன்படுத்தப்பட்டு வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here