புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன்

0
29

புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்த இந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி முதல் இன்​னிங்​ஸில் 376 ரன்​களும், டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்​களும் எடுத்​தன.

23 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைதர​பாத் அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 70 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்​திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்​டது. வருண் கவுட் 56, ராகுல் ராதேஷ் 31 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி சார்​பில் வித்​யுத், ஹெம்​சுதேஷன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத் அணி வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது. வெற்றி பெற்ற ஹைத​ரா​பாத் அணிக்கு டிஎன்​சிஏ தலை​வர் அசோக் சிகாமணி கோப்​பையை வழங்​கி​னார். நிகழ்ச்​சி​யில் கவுரவ பொருளாளர் ஸ்ரீனி​வாச​ராஜ், கவுரவ செய​லா​ளர் ஆர்​.ஐ.பழனி, முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர் ராபின் சிங், போட்டி அமைப்​பாளர் ரமேஷ் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

கால் இறுதியில் நிகத் ஜரீன்: இங்​கிலாந்​தின் லிவர்​பூல் நகரில் உலக குத்​துச்​சண்டை சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 51 எடை பிரி​வில் இந்​தி​யா​வின் நிகத் ஜரீன், ஜப்​பானின் 21 வயதான யுனா நிஷின​காவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். 29 வயதான நிகத் ஜரீன் கால் இறுதி சுற்​றில், ஒலிம்​பிக்​கில் இரு முறை வெள்​ளிப் பதக்​கம் வென்​றவரும் 2022-ம் ஆண்டு உலக லைட் ஃப்​ளைவெ​யிட் சாம்​பியனு​மான துருக்​கி​யின் பஸ் நாஸ் ககிரோக்​லு​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்​.

சாட்விக்-ஷிராக் ஜோடி வெற்றி: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, தைவானின் சியு சியாங் சீ, வாங் சி-லின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-13, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

பிப்ரவரி 7-ல் டி 20 உலகக் கோப்பை?– ஆடவருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. உலகளாவிய இந்த தொடருக்கு இதுவரை 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ல் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறக்கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெறும். இந்தியாவில் 5 மைதானங்களிலும், இலங்கையில் 2 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறக்கூடும்.

போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 55 ஆட்டங்களை உள்ளடக்கியதாக உலகக் கோப்பை தொடர் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here