கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஆக.,30) அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பெண் ஒருவரை வைத்து கணவன், மனைவி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் அவரது மனைவி சந்திரா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த பெண் மீட்கப்பட்டார்.














