சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டி: மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்மானம்

0
16

சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட உள்​ள​தாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. மனிதநேய ஜனநாயகக் கட்​சி​யின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்​றும் செயற்​குழுக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.தமி​முன் அன்​சாரி தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

‘வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிப்​பதுடன், 234 தொகு​தி​களி​லும் கூட்​டணி கட்​சி​யினரின் வெற்​றிக்கு பாடுபட வேண்​டும். மறைந்த கம்​யூனிஸ்ட் தலை​வர் நல்​ல​கண்ணு பெயரில் நுழைவு​வா​யில் அமைக்க வேண்​டும்’ என்​பது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் இந்த கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்​டன.

மாலை​யில், இப்​தார் நோன்பு துறப்பு நிகழ்ச்​சி​யும், தொடர்ந்து தமி​முன் அன்​சாரி எழு​திய ‘சட்​ட சபை​யில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளி​யீட்டு விழா​வும் நடை​பெற்​றது.

நூலை தமி​முன் அன்​சாரி வெளி​யிட, கொங்கு இளைஞர் பேர​வைத் தலை​வர் தனியரசு, முக்​குலத்​தோர் புலிப்​படை தலை​வர் கருணாஸ் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும்இஸ்​லாமிய இயக்​கங்​களைச் சேர்ந்​தவர்​கள் பெற்​றுக்​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் தமி​முன் அன்​சாரி பேசி​ய​தாவது: தமிழக​மும், கேரளா​வும் சமூக நல்​லிணக்​கத்​துக்கு முன்​மா​திரி​யாக உள்​ளன. நாங்​கள் மத நல்​லிணக்​கத்​துக்கு உதா​ரண​மாக இருக்​கிறோம். அனை​வரது உணர்​வை​யும் மதிக்​கும் விதத்​தில், இந்து மக்​களுக்​காக சைவ கஞ்சி ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​துக்​கள், கிறிஸ்​தவர்​கள் உள்​ளிட்ட அனை​வரை​யும் உற்ற நண்​பர்​களாக மாற்​றிக் கொள்ள வேண்​டும். அப்​போது​தான் பாஜக‌, ஆர்​எஸ்​எஸ் அமைப்பை வீழ்த்த முடி​யும்.

‘சட்​டசபை​யில் சமூக நீதி குரல்’ புத்​தகத்தை ஓராண்டு கடினப்​பட்டு உரு​வாக்கி உள்​ளோம். தலைப்பு வாரி​யாக​வும் உள்​தலைப்பு கொடுத்​தும் புத்​தகத்தை உரு​வாக்கி உள்​ளேன்.

எனது உரை​யின்​போது சபா​நாயகர் குறுக்​கீடு, துணை சபா​நாயகர் குறுக்​கீடு, பேர​வை​யில் பேசி​ய​போது எனக்கு இரண்டு முதல்​வர்​கள் பதில் அளித்​தது ஆகியவை குறித்​தும் தெரி​வித்​துள்​ளேன். இங்கு இருப்​பவர்​கள் சிலரை ஜூன் மாதத்​தில் மீண்​டும் சட்​டப்​பேர​வை​யில் சந்​திப்​போம்​. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here