டியூட் படத்துக்கு மமிதாவை தேர்வு செய்தது எப்படி? – சொல்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

0
16

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே பட வேலைகளைத் தொடங்கினோம். முதல் படத்தின் கதையை எழுதும்போது யார் நடிப்பார்கள் என்பது தெரியாது. நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் படைப்பு சுதந்திர அடிப்படையில், ரஜினி சாருக்கு இப்போது 30 வயது இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இந்தக் கதையை உருவாக்கினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார்.

‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துதான் மமிதாவைத் தேர்ந்தெடுத்தோம். பிறகுதான் அவர் நடித்த ‘பிரேமலு’ வெளியானது. கதைப்படி, பிரதீப் – மமிதா இருவரும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்துகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள்தான் கதை.

‘ரஜினி- ஸ்ரீதேவி’ இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. கதையில் காதல் மட்டுமில்லாமல் ஒரு மாஸ் இருக்கும். படம் பார்க்கும்போது அது புரியும். படப்பிடிப்பைச் சென்னையில் தான் நடத்தி இருக்கிறோம். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இவ்வாறு கீர்த்தீஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here