மத்திய பட்ஜெட்டால் பங்​கு​கள் எவ்வளவு வீழ்ச்சி அடை​யும்? – அகிலேஷ் கேள்வி

0
31

மத்​திய அரசின் பட்​ஜெட் ஏமாற்​றமளிக்​கும் வருந்​தத்​தக்க பட்​ஜெட் என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் தெரி​வித்​தார். இதுகுறித்து எக்ஸ் வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மத்​திய பட்​ஜெட் சாதாரண மக்​களை புறக்​கணித்​துள்​ளது. பட்​ஜெட்​டின் விளை​வால் பங்​குச் சந்​தைகள் கடுமை​யாக சரிந்​துள்​ளன. ஞாயிற்​றுக்​கிழமை பங்​குச் சந்​தைகள் ஏன் திறக்​கப்​பட்​டன? என்ற கேள்​வியை விட பங்​கு​கள் மேலும் எவ்​வளவு வீழ்ச்சி அடை​யும் என்ற கேள்​வி​தான் உண்மையில் எழுந்​தது.

நடுத்தர வர்க்​கத்​தினர் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர். ஏழைகள், சமூகத்​தில் விளிம்பு நிலை மக்​கள், தாழ்த்​தப்​பட்ட பிரிவினர் மேலும் பலவீனப்​படுத்​து​வ​தாக பட்​ஜெட் அமைந்துள்​ளது. பட்​ஜெட்​டில் எந்த அர்த்​த​முள்ள நிவாரணமும் விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், சிறுவணிகர்​கள், கடைக்​காரர்​கள் ஆகியோ​ருக்கு கிடைக்க​வில்​லை. மொத்​தத்​தில் இது ஏமாற்​றமளிக்​கும் வருந்​தத்​தக்க பட்​ஜெட்​டாக உள்ளது. இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here