‘யோகிடா’ டைட்​டிலை தேர்வு செய்தது எப்​படி?

0
38

நடிகை சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்​தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​.6-ம் தேதி இப்​படம் வெளி​யாக இருக்​கிறது.

மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்​பில் செந்​தில்​கு​மார் தயாரித்​துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா கூறும்​போது, “கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்​னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த யோகி டா ஆரம்​பித்​தது.

இந்த படத்​துக்காக டைட்​டிலை யோசிக்​கும் போது, ‘கபாலி’ படத்​தில் உள்​ளது போல ஹேர் ஸ்டைல், ஆக் ஷன் இந்த படத்​தில் இருந்​தது. அதனால் தான் இந்த டைட்​டில் வைத்தோம். கபாலி படத்​துக்​காக நிஜ​மாகவே முடியை வெட்​டினேன். இந்​தப் படத்​தில் விக் வைத்​துள்​ளேன்.

இன்று அதிக படங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. கரோனா​வுக்கு பிறகு ஓடிடி தளங்​களின் வருகை அதிகரித்துள்​ளது. இந்​தப் படத்​தில் ஆக் ஷன் காட்​சிகள் சிறப்​பாக வந்​துள்​ளன. ‘பே​ராண்​மை’ படத்​தில் முதல் முறை​யாக ஆக்​ஷன் காட்​சிகளில் நடித்​தேன். அது​தான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. அனைத்து ஆக் ஷன் காட்​சி களிலும் டூப் இல்​லாமல் நானே நடித்தேன்” என்​றார். படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here