‘டியூட்’ படத்தைத் தேர்வு செய்தது எப்படி? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

0
19

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘டியூட்’. சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்​கி​யுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு அக். 17-ம் தேதி வெளி​யாகும் இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

விழா​வில், பிரதீப் ரங்​க​நாதன் பேசும்​போது, “சரத்​கு​மார் சார் இந்​தப் படத்தை ஒப்​புக் கொண்​டதற்கு நன்​றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோவுடன் நடிப்​பேன் என்று நினைக்​கவே இல்​லை. அவருடைய வயதும் எனர்​ஜி​யும் எனக்​குப் பயங்கர இன்​ஸ்​பிரேஷன். ‘லவ் டுடே’ படத்​துக்​காக ஹீரோ​யின் தேடிக்​கொண்​டிருந்த போது மமி​தாவை ஒரு குறும்​படத்​தில் பார்த்​தேன். அவரை நடிக்க வைக்க முயற்சி செய்​த​போது அவர் ‘வணங்​கான்’ படத்​தில் அப்போது பிசி​யாக இருந்​த​தால் பிடிக்க முடிய​வில்​லை. ஆனால், ‘டியூட்’ படத்​தில் மமிதா நடிக்​கிறார் என இயக்​குநர் கீர்த்தி சொன்​ன​போது வியப்​பாக இருந்​தது. இதில் அவருக்கு வலு​வான கதா​பாத்​திரம். இது​வரை பார்க்​காத மமி​தாவை, எமோஷனலான மமி​தாவை இந்​தப் படத்​தில் பார்ப்​பீர்​கள்.

‘லவ் டுடே’ முடிந்​ததும் எனக்கு நிறைய கதைகள் வந்​தன. அப்​போது ‘டியூட்’ கதை​யும் வந்​தது. ‘நான் கதைச் சுருக்​கம் அனுப்​புங்க’ என்று சொன்​னேன். அனுப்​பி​னார்​கள். படித்​து​விட்​டு, ‘மீண்​டும் ஒரு காதல் கதை​யில் நடிக்​கணு​மா?’ என்று யோசித்​துக் கொண்​டிருந்​தேன். அப்​போது யார் எனக்​குப் பேசி​னாலும் ‘கீர்த்​தினு ஒரு டைரக்​டர் உங்​ககிட்ட கதை சொல்​லணும்னு’ என்று ஆரம்​பிப்​பார்​கள். பிறகு மைத்ரி மூவிஸில் இருந்து ஃபோன். ‘கீர்த்தி என்​பவர் ஒரு கதை சொன்​னார். கேட்​கிறீர்​களா?’ என்​றார்​கள். ‘நாம் வேண்​டாம் என்று சொல்​லி​யும், நம்மை ஒருத்​தர் விரட்​டிக் கொண்டே இருக்​கிறாரே, அவரைப் பார்த்தே ஆக வேண்​டும்’ என்று அழைத்துக் கேட்டேன். கதைச் சுருக்​கத்​தை​விட, ஒவ்​வொரு காட்​சி​யிலும் வசனத்​தி​லும் என்னை மிரட்​டி​விட்​டார்.

இருந்​தா​லும் நான்​கைந்து மாதம் விட்​டு​விட்​டேன். ஆனால் ஒவ்​வொரு நாளும் அவர் சொன்ன கதா​பாத்​திரம் மனதில் ஓடிக் கொண்​டிருந்​தது. பிறகு நான் அவரை அழைத்​தேன். அவர் ‘என்னை நம்​புங்க’ என்​றார். அவர் முயற்​சி, எனக்​குப் பிடித்​திருந்​தது. பிறகு ஆரம்​பித்​தது​தான் இந்​தப் படம். நிச்​ச​யம் ஒரு பெரிய இயக்​குந​ராக கீர்த்​தீஸ்​வரன்​ வரு​வார்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here