Home சினிமா செய்திகள் ‘விடாமுயற்சி’ டீசர் எப்படி? – ஸ்டைலிஷ் அஜித், விறுவிறு காட்சிகள்! 

‘விடாமுயற்சி’ டீசர் எப்படி? – ஸ்டைலிஷ் அஜித், விறுவிறு காட்சிகள்! 

0

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் எப்படி? – நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன.

அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகல் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் டீசரை இன்னும் சற்றே சுவாரஸ்யமாக கட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் டீசரில் இல்லை.

அஜித் வழக்கம்போல ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சொல்லப்பட்ட ஆரவ் டீசரில் இடம்பெறவில்லை. அநேகமா முதல் காட்சியில் அர்ஜுன் குழு இழுத்துப் போட்ட அந்த நபர் ஆரவ் ஆக இருக்கலாம். அனிருத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ஓம் பிரகாஷின் கேமரா ஒரு த்ரில்லர் படத்துக்கான அடர்த்தியான காட்சிகளை கண்முன் நிறுத்தும் என்று நம்பலாம். டீசர் வீடியோ:

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version