ம.பி.யின் ரத்லாம் நகரில் வசிக்கும் பண்டி நினாமா(29), ஒரு தகராறில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் கோமாவில் இருப்பதாகக்கூறி ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்துமாறு பண்டியின் குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறினர். பணத்தை எடுத்து வர பண்டி யின் மனைவி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பண்டி நினாமா, மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே, தான் கோமாவில் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனைக்கு வந்த பண்டியின் மனைவி இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தார். இதனிடையே, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.














