‘நோவா’வில் ஹாரர் சயின்ஸ் பிக்‌ஷன் கதை!

0
9

பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’. இதில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர்.

ஆதி, ஹன்சிகா நடித்த ‘பார்ட்னர்’ படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்துள்ளது. விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ இயக்கி இருக்கிறார். யுவராஜ் சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி மைலோ கூறும்போது, “இது ஹாரர் சயின்ஸ் பிக் ஷன் சூப்பர் நேச்சுரல் ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது.

மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோவின் தம்பி, ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here