
மத்திகோடு சாலை விபத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு: 19 வயது இளைஞர் ஜெசின் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் நேற்று (11.11.2026) நடந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனர்
இந்நிலையில், அதே விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 19 வயது இளைஞர் ஜெசின் இன்று (12.11.2026) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெருவுக்கடை அருகே பொட்டக்குழியைச் சேர்ந்த D. ஜெகனின் மகனான ஜெசினின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .