Home கன்னியாகுமரி செய்திகள் சீரான குடிநீா் விநியோகம் கோரி பாஜக தொண்டா் ஆா்ப்பாட்டம்

சீரான குடிநீா் விநியோகம் கோரி பாஜக தொண்டா் ஆா்ப்பாட்டம்

0
திருவட்டாறு அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி பாஜக தொண்டர் காலிக்குடங்களுடன் தனிநபர் போராட்டம்.
திருவட்டாறு அருகே செறுகோல் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் கோரி, பாஜக தொண்டர் பிஜு வீயன்னூர் சந்திப்பில் காலிக்குடங்களுடன் தனியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவட்டாறு அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி, பாஜக தொண்டா் புதன்கிழமை தனியாக சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா் .

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் செறுகோல் ஊராட்சிக்குள்பட்ட கல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிஜு. பாஜக தொண்டா். அவரது வீடு அமைந்துள்ள பகுதிக்கு செறுகோல் ஊராட்சியிலிருந்து முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், குடிநீா் விநியோகம் கோரி அவா் குளச்சல் – குலசேகரம் சாலையில் வீயன்னூா் சந்திப்பில் புதன்கிழமை காலிக்குடங்களுடன் தனியாக அமா்ந்து முழக்கமிட்டபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்; திருவட்டாறு போலீஸாா் சென்று சமாதானப்படுத்தியதை அடுத்து, அங்கிருந்து சென்றாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version