உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் ஆக.19-ல் மோதல்

0
23

எப்​ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறுகிறது. இதில் ஆடவர் பிரி​வில் 16 அணி​களும், மகளிர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோதுகின்​றன. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தொடரில் கலந்து கொள்​ளும் 16 அணி​களும் 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு பிரி​விலும் 4 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ஆடவர் மற்​றும் மகளிர் பிரி​வில் இந்தியா ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. ஆடவருக்​கான போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் நெதர்​லாந்​து, அர்​ஜெண்​டி​னா, நியூஸிலாந்​து, ஜப்​பான் அணி​களும் ‘பி’ பிரி​வில் பெல்ஜியம், ஜெர்​மனி, பிரான்​ஸ், மலேசியா அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

‘சி’ பிரி​வில் ஆஸ்​திரேலி​யா, ஸ்பெ​யின் அயர்​லாந்​து, தென் ஆப்​பிரிக்கா அணி​களும், ‘டி’ பிரி​வில் இங்​கிலாந்​து, இந்தியா, பாகிஸ்​தான், வேல்ஸ் அணி​களும் இடம் பெற்றுள்​ளன. மகளிருக்​கான போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் நெதர்​லாந்​து, ஆஸ்​திரேலி​யா, சிலி, ஜப்​பான் அணி​களும் ‘பி’ பிரி​வில் அர்​ஜெண்​டி​னா, ஜெர்​மனி, அமெரிக்​கா, ஸ்காட்லாந்து அணி​களும் ‘சி’ பிரி​வில் பெல்​ஜி​யம், ஸ்பெயின், நியூஸிலாந்​து, அயர்​லாந்து அணி​களும் ‘டி’ பிரிவில் சீனா, இங்​கிலாந்​து, இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்கா அணி​களும் இடம் பிடித்​துள்​ளன.

போட்​டிகள் லீக் மற்​றும் நாக் அவுட் முறை​யில் நடத்தப்படுகின்றன. லீக் சுற்​றில் ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பிடித்​துள்ள அணி தனது பிரி​வில் உள்ள மற்ற அணிகளு​டன் தலா ஒரு முறை மோதும். புள்​ளி​கள் அடிப்படை​யில் ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் 2-வது சுற்​றுக்கு முன்​னேறும். இந்த 8 அணி​களும் இ, எஃப் என 2 பிரிவு​களாக பிரிக்​கப்​படும்.

‘இ’ பிரி​வில் லீக் சுற்​றில் ஏ மற்​றும் டி பிரி​வில் முதல் 2 இடங்களை தலா 2 அணி​கள் என மொத்​தம் 4 அணி​கள் இடம் பெறும். இதே​போன்று எஃப் பிரி​வில் பி மற்​றும் சி பிரிவில் முதல் 2 இடங்​களை பிடித்த தலா 2 அணி​கள் என 4 அணி​கள் இடம் பெறும். ‘இ’ மற்​றும் எஃப் பிரி​வில் இடம் பெற்​றுள்ள அணி​கள் தங்​களுக்​குள் தலா ஒரு முறை மோதும்.

இதில் ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறும். ஆடவருக்கான போட்​டி​யில் ‘டி’ பிரிவில் உள்ள இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் ஆகஸ்ட் 15-ம் தேதி வேல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. தொடர்ந்து 17-ம் தேதி இங்​கிலாந்​துட​னும், 19-ம் தேதி பாகிஸ்​தானுட​னும் இந்​திய அணி விளை​யாடு​கிறது.

மகளிருக்​கான போட்​டி​யில் இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் 16-ம் தேதி சீனாவை எதிர்​கொள்​கிறது. தொடர்ந்து 18-ம் தேதி தென் ஆப்​பிரிக்கா​வுட​னும், 20-ம் தேதி இங்​கிலாந்​துட​னும் இந்​திய அணி பலப்​பரீட்சை நடத்துகிறது. மகளிர் பிரி​வில் லீக் சுற்​றுகள் ஆகஸ்ட் 15 முதல் 20-ம் தேதி வரை​யும் 2-வது சுற்று ஆட்​டங்​கள் 21 முதல் 24-ம் தேதி வரை​யும் நடை​பெறுகின்​றன.

அரை இறுதி ஆட்​டங்​கள் 27-ம் தேதி நடை​பெறுகின்​றன. தொடர்ந்து சாம்​பியன் பட்​டம் வெல்​வது யார்? என்​பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்​டி 29-ம்​ தேதி நடை​பெறுகிறது. ஆடவர்​ பிரி​வில்​ அரை இறுதி ஆட்​டங்​கள்​ 28-ம்​ தேதி​யும்​, இறு​திப்​ போட்​டி 30-ம்​ தேதியும்​ நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here