ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்

0
277

ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஹாக்கி இந்தியா லீக்கின் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 28-ம் தேதி தொடங்குகிறது. 2025-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒடிசாவில் உள்ள ரூர்கேலா மற்றும் ராஞ்சியில் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதல் முறையாக பங்கேற்கிறது. இந்த அணியை சார்லஸ் குரூப் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகரன், தலைமை நிர்வாக அதிகாரி உதய்சின் வாலா, உதவி பயிற்சியாளர் சார்லஸ் டிக்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த அமித் ரோகிதாஸ் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தமிழகத்தை செல்வம் கார்த்தி, அர்ஜூன், திலீபன், செந்தமிழரசு, ஆனந்த், பிருத்வி ஆகிய 6 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here