இமாச்சலில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை

0
21

இ​மாச்​சலில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணியவும் சமூக ஊடகத்​தில் அரசி​யல், மதக் கருத்​துகள் தெரிவிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இமாச்​சலில் கடந்த 2017ம் ஆண்​டு, ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஊழியர்​களுக்​கான ஆடை நெறிமுறைகளை அனை​வரும் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் என மாநில அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக தலை​மைச் செய​லா​ளர் சஞ்​சய் குப்தா வெளியிட்​டுள்ள விரி​வான வழி​காட்​டு​தலின்​படி, அனைத்து அரசு ஊழியர்​களும் கண்​ணி​ய​மான, சுத்​த​மான மற்​றும் தொழில்​முறை சார்ந்த ஃபார்​மல் ஆடைகளை மென்​மை​யான வண்​ணங்​களில் அணிய வேண்​டும்.

அலு​வல​கத்​தில் இருக்​கும் போதோ அல்​லது நீதி​மன்​றத்​தில் ஆஜராகும் போதோ கேஷுவல் அல்​லது பார்ட்டி உடைகளை அணி​யக் கூடாது.

ஆண் ஊழியர்​கள் காலர் வைத்த சட்டை மற்​றும் பேன்ட் அணிய வேண்​டும். ஷூ, செருப்பு போன்ற பொருத்​த​மான காலணி​களை அணிய வேண்​டும். பெண் ஊழியர்​கள் புட​வை, ஃபார்​மல் சூட்​கள், சல்​வார், சுரி​தார் அல்​லது துப்​பட்​டாவுடன் கூடிய குர்தா போன்ற ஃபார்​மல் ஆடைகளும் ஷூ, செருப்பு போன்ற பொருத்​த​மான காலணி​களும் அணிய வேண்​டும். அரசு ஊழியர்​கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிய அனு​ம​தி​யில்​லை.

மேலும், அரசு கொள்​கைகள் அல்​லது திட்​டங்​கள் குறித்து தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்​கு​கள் வாயி​லாக கருத்து தெரிவிப்​ப​தை​யும் ஏதேனும் பொது மேடை, வலைப்​ப​திவு அல்​லது சமூக ஊடகத் தளங்​களில் அரசி​யல் அல்​லது மத ரீதி​யான கருத்து வெளி​யிடு​வதை​யும் அரசு ஊழியர்​கள் தவிர்க்க வேண்​டும் என்று இமாச்​சல் அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

மேலும், இந்த அறி​வுரை மற்​றும் வழி​காட்​டு​தலை அரசு ஊழியர்கள் மீறி​னால் அது கடுமை​யான​தாக கருதப்​படும். அத்தகைய அரசு ஊழியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்​றும்​ எச்​சரித்​து உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here