மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிக்கும் நிலை: தமிழக அரசு மீது மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்​றச்​சாட்டு

0
187

வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்​தில் செயல்​படுத்து​வ​தால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிப்​பதாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. நில உரிமை​யும், பழங்​குடி மக்களின் இனச்​சான்று, இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பும் கோரி சென்னை​யில் நேற்று தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது.

ஆர்ப்​பாட்​டத்தை தொடங்கி வைத்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில செயலாளர் பி.சண்​முகம் பேசி​ய​தாவது: ஆதிதிரா​விடர், பழங்​குடி​யினர் நல பள்ளி​களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்​படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்​டும். ஒதுக்​கப்​படும் நிதி முழு​மையாக செலவழிக்​கப்​படு​கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்​டும்.

வன உரிமைச் சட்டத்​தின்​கீழ் இதுவரை 15,442 மலைவாழ் குடும்​பங்​களுக்கு வன உரிமை பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது. இச்சட்டம் கொண்டு வரப்​பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இச்சட்​டத்​தைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமை​யில் ஒரு குழு உள்ளது. ஆனால், இக்குழு இதுவரை கூட்​டப்​பட​வில்லை.

ஆமை வேகத்​தில் இச்சட்டம் நடைமுறைப்​படுத்​தப்​படுத்துவதால் மலைவாழ் மக்கள் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். சொந்த வீடு இல்லாத அனைத்து ஆதிவாசி குடும்​பங்​களுக்​கும் இச்சட்​டத்​தின்​கீழ் பட்டா வழங்க வேண்​டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here