2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை எட்ட உயர்கல்வி, ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் முன்னுரிமை: பிரதமருக்கு பாலகுருசாமி கடிதம்

0
15

“2047-க்​குள் வளர்ந்த இந்​தி​யா” இலக்கை எட்ட வேண்​டு​மா​னால், உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்​சிக்கு தேசிய அளவில் முன்​னுரிமை அளிக்க வேண்டும் என்​று, பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, முன்​னாள் துணைவேந்​தர் இ.பால​குரு​சாமி கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, அண்ணா பல்​கலைக் கழகத்​தின் முன்​னாள் துணைவேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பேராசிரியர் பால​குரு​சாமி பிரதமருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா தனது வரலாற்​றில் இன்று மிக முக்​கிய​மான காலகட்​டத்​தில் இருக்​கிறது.

சுதந்திரத்​தின் நூற்​றாண்​டான 2047-க்​குள் இந்​தி​யாவை வளர்ந்த நாடாக மாற்​றும் உங்​களின் பார்வை நாட்​டில் உள்ள கோடிக்கணக்​கான மக்​களை ஊக்குவித்து வரு​கிறது. இந்த உயரிய இலக்கை எட்​டு​வது நமது உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி அமைப்​பின் வலிமை​யை​யும், தரத்​தை​யும் சார்ந்​தது.

ஓர் அறி​வு​சார்ந்த பொருளாதார​மாக இந்​தியா உரு​வாக வேண்​டு​மா​னால், உயர்​கல்வியும், ஆராய்ச்​சி​யும் மிக வலு​வாக வளர வேண்​டியது அவசி​யம். அந்த வகை​யில், உயர்​கல்​வித்துறை​யில் முக்​கிய பிரச்சினையாக இருப்​பது பேராசிரியர் காலிப் பணி​யிடங்​கள்​தான்.

நாடு முழு​வதும் பல பல்கலைக்கழகங்​களி​லும், உயர் கல்வி நிறு​வனங்​களி​லும் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்பப்​ப​டா​மல் உள்​ளன. இதனால், கல்​வித் தரமும், ஆராய்ச்சி முன்னேற்​ற​மும் பெரிதும் பாதிக்​கப்பட்​டுள்​ளன. பல பல்​கலைக்கழகங்​களில் ஆராய்ச்சி உள்​கட்டமைப்பு வசதி​கள் சரியாக இல்​லை.

ஆய்வகங்​கள், ஆராய்ச்சி வசதி​கள் போது​மானதாக இல்​லை. இதன் காரண​மாக, உலகள​வில் போட்​டி​யிடக் கூடிய தரமான ஆராய்ச்​சியை உரு​வாக்க பல நிறு​வனங்​கள் சிரமப்​படு​கின்​றன.

உயர்​கல்​வி​யில் மொத்த சேர்க்கை விகிதம் தற்​போது 28 சதவீதம் என்ற அளவில்​தான் உள்​ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன்​படி, இந்த அளவு 2035-க்​குள் 50 சதவீதமாக உயர்த்​தப்பட வேண்​டும்.

இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் பல்​கலைக் கழகங்​கள், பேராசிரியர்​கள், கல்வி உட்கட்​டமைப்​பில் மிகப்​பெரிய அளவிலான விரி​வாக்​கம் தேவை. மற்​றொரு முக்​கிய பிரச்சினை கல்​வி​யில் அரசின் முதலீட்டு அளவு.

தற்​போது, இந்​தியா கல்விக்​காக உள்​நாட்டு ஒட்​டு மொத்த உற்​பத்​தி​யில் (ஜிடிபி) 2.8 சதவீதம் மட்​டுமே செல​விடு​கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்​கை​யில் இந்த அளவு 6 சதவீத​மாக பரிந்துரைக்​கப்​பட்​டுள்​ளது.

அதேபோல், ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு பணி​களுக்கு தேசிய முதலீடு ஒரு சதவீதத்​துக்​கும் குறை​வாகவே உள்​ளது. ஆனால், வளர்ந்த நாடு​கள் 3 சதவீதத்​துக்​கும் மேல் முதலீடு செய்கின்​றன.

அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் கண்​டு​பிடிப்​பில் இந்​தியா உலக அளவில் முன்​னணி​யில்திகழ வேண்​டு​மா​னால், ஆராய்ச்சி நிதி அதி​கரிக்​கப்பட வேண்​டும்.

எனவே, 2047-க்​குள் இந்​தியா முன்​னேறிய நா​டாக உரு​வாக வேண்​டுமெனில் உயர்​கல்​வி​யும், ஆராய்ச்சி தேசிய முன்​னுரிமை​யாக மாற வேண்​டும்​. இவ்​வாறு கடிதத்​தில்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here