அதிவேக மீரட் மெட்ரோ, நமோ பாரத் ரயில் சேவை – சிறப்பு அம்சம் என்ன?

0
19

நமோ பாரத் அதிவேக ரயில் வழித்​தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்​றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பின்​னர் மெட்ரோ ரயி​லில் பயணம் செய்​தார்.

நாட்​டின் முதல் பிராந்​திய அதிவேக போக்​கு​வரத்து அமைப்​பின் (RRTS), டெல்​லி – மீரட் இடையி​லான நமோ பாரத் வழித்​தடத்​தின் பெரும்​பகுதி ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்​ளது. இந்​நிலை​யில் கட்​டு​மானப் பணி​கள் முடிவடைந்த மீத​முள்ள பகு​தி​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.

மேலும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் நிலை​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், நாட்​டின் அதிவேக மீரட் மெட்ரோ மற்​றும் நமோ பாரத் ரயில் சேவையை பச்​சைக்​ கொடியை அசைத்து தொடங்கி வைத்​தார். பின்​னர் அவர் சதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு ரயில் நிலை​யம் வரை மெட்ரோ ரயி​லில் பயணம் செய்​தார். அப்​போது அவர் அந்த ரயிலில் பயணம் செய்த மாணவர்​கள், அதி​காரி​கள் மற்​றும் பயணிகளு​டன் கலந்​துரை​யாடி​னார்.

உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், அம்​மாநில பாஜக தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான பங்​கஜ் சவுத்ரி மற்​றும் மூத்த அதி​காரி​கள் இவ்​விழா​வில் கலந்​து​கொண்டு பிரதமருடன் பயணித்​தனர். இதையடுத்​து, மீரட்​டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்​பில் முடிவடைந்த பல்​வேறு வளர்ச்​சிப் பணி​களை​யும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பல்​வேறு துறைகளைச் சார்ந்த இந்​தத் திட்​டங்​கள், இப்​பகு​தி​யின் உள்கட்டமைப்பை மேம்​படுத்​து​வதை​யும் பொதுச் சேவை​களை வலுப்​படுத்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்​டுள்​ளன.

மீரட் மெட்ரோ மற்​றும் விரி​வாக்​கப்​பட்ட நமோ பாரத் ரயில் சேவை​களின் தொடக்​க​மானது, மேற்கு உத்தர பிரதேசத்​தில் நகர்ப்​புற போக்​கு​வரத்து மற்​றும் மண்டல இணைப்பை வலுப்படுத்​து​வதற்​கான ஒரு முக்​கிய நடவடிக்​கை​யாகக் கருதப்படு​கிறது.

82 கி.மீ நீளம் கொண்ட டெல்​லி-மீரட் நமோ பாரத் வழித்​தடத்​தில், டெல்​லி​யின் சராய் காலே கான் மற்​றும் நியூ அசோக் நகர் இடையே 5 கி.மீ. பகு​தி​யும், உத்தர பிரதேசத்​தின் மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் இடையே 21 கி.மீ பகு​தி​யும் அடங்​கும்.

இந்த ரயில்​கள் மணிக்கு 180 கி.மீ வேகத்​தில் செல்​லும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது நாட்​டின் அதிவேக ரயில்​களில் ஒன்​றாக அமை​கிறது. டெல்லி மற்​றும் சாகி​பா​பாத், காசி​யா​பாத், மோடிநகர் மற்​றும் மீரட் போன்ற முக்​கிய நகர்ப்​புற மையங்களுக்கு இடையே வேக​மான மற்​றும் தடையற்ற பயணத்தை வழங்​கு​வதை இந்த வழித்​தடம் நோக்​க​மாகக் கொண்டுள்​ளது.

தரம் தாழ்ந்த காங்​கிரஸ் – உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டில் நேற்று நடை​பெற்ற கூட்​டத்​தில் உரை​யாற்​றிய மோடி இது குறித்து கூறிய​தாவது: டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டில் திடீரென அத்​து​மீறி நுழைந்த காங்​கிரஸ் இளைஞர் பிரி​வினர் சட்டை இல்​லாமல் போராட்​டம் நடத்​தி​யது மிக​வும் வருந்​தத்​தக்​கது மட்​டுமின்றி அறுவறுக்​கத்​தக்​கது. ஒரு உலகளா​விய நிகழ்வை காங்​கிரஸ் தனது அழுக்கு மற்​றும் நிர்​வாண அரசி​யலுக்கு பயன்​படுத்​திக் கொண்டுள்​ளது. அவர்​களின் இந்​தப் போ​ராட்​டம் மிக பழமையான காங்​கிரஸ் கட்சி கருத்​தி​யல் ரீதி​யாக எவ்​வளவு வலுவிழந்து வறிய நிலை​யில் உள்​ளது என்​பதை பிர​திபலிக்​கிறது.

நீங்​கள் ஏற்​கெனவே அரசி​யல் ரீதி​யாக நிர்​வாண​மாகத்​தான் இருக்​கிறீர்​கள். பிறகு ஏன் ஆடைகளை கழற்ற வேண்​டிய அவசியம் ஏற்​பட்​டது. நாட்​டின் பழமை​யான காங்​கிரஸ் கட்சி திவாலாகி​விட்​டது. காங்​கிரஸ் தனது சொந்த நாட்​டையே அவதூறு செய்​வ​தில் மும்​முர​மாக உள்​ளது. நாட்​டிற்​குள் இருக்​கும் சில அரசியல் கட்​சிகளால் இந்​தி​யா​வின் வெற்​றியை ஜீரணிக்க முடியவில்​லை.

இந்​தி​யா​வில் உலகின் மிகப்​பெரிய ஏஐ மாநாட்டை நாம் நடத்தினோம். அது ஒன்​றும் பாஜக​வின் சொந்த நிகழ்ச்சி அல்ல. ஆனால் காங்​கிரஸும் அதன் ஆதர​வாளர்​களும் என்ன செய்தார்கள்? இந்​தி​யா​வுக்​கான ஒரு உலகளா​விய நிகழ்வை அவர்​கள் தங்​களது அற்​ப அரசி​யலுக்​கான தளமாக மாற்​றிக்​கொண்​டார்கள்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here