தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

0
70

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆறுகள், அரசு நிலங்​கள் மற்​றும் ரயத்​து​வாரி நிலங்​களில் சட்​ட​விரோதக் குவாரி​கள் மூலம் விதி​களை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்​ளப்​படு​கிறது. இதனால் இயற்கை வளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது.

வைகை, காவிரி, பாலாற்​றில் மணல் அள்​ளிய​தால் இயற்கை நீரோட்​டத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. பாசனக் கண்​மாய்​களுக்கு தண்​ணீர் சென்​றடைய​வில்​லை. நிலத்​தடி நீர்​மட்​ட​மும் குறைந்து வரு​கிறது. சிவகங்கை மாவட்​டத்​தில் சட்​ட​விரோத மணல் குவாரிகள் இயங்​கு​கின்​றன. இதைத் தடுக்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுப்​ப​தில்​லை.

பட்டா நிலத்​தில் மண் அள்​ளுவ​தால் விவ​சா​யம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது. இதனால், மது​பான விற்​பனைக்கு டாஸ்​மாக் நிறு​வனம் இருப்​பது​போல் மண், மணல் அள்​ளுவது மற்​றும் விற்​பனை செய்​வதை ஒழுங்​குபடுத்த டாம்​சாக் (தமிழ்​நாடு மணல் கழகம்) அமைக்க உத்​தர​விட வேண்​டும். அது​வரை மண், மணல் அள்ள உரிமம் வழங்க தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “இது அரசின் கொள்கை முடிவு சார்ந்​தது. இதில் நீதி​மன்​றம் தலை​யிட்​டு, அரசுக்கு உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாது. மனு தள்​ளு​படி செய்​யப்​படுகிறது” என உத்​தர​விட்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here