ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் காரணமாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 595 பேர் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கீழே வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாட்டு இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி ஈரான் (டெஹ்ரான்) தூதரகத்தை +98 9128109115 (வாட்ஸ்-அப்), +98 9128109109 மற்றும் +98 9128109102 ஆகிய எண்கள் மூலமாகவும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தை +971 543090571 மற்றும் 800 46342 ஆகிய எண்களிலும், சவுதி அரேபியாவுக்கு (ரியாத் மற்றும் ஜெட்டா) +966 542126748, +966 536209704 ஆகிய வாட்ஸ்-அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இஸ்ரேல் நாட்டு (டெல் அவீவ்) தூதரகத்துக்கு +972 54 7520711 என்ற எண்ணையும், ஓமனுக்கு (மஸ்கட்) +968 98282270 மற்றும் கத்தாருக்கு (தோஹா) +974 55647502 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை அல்லது திருச்சி விமான நிலையம் வழியாக தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள், தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையை தொடர்பு கொள்ளலாம்.
இதற்காக இந்தியாவுக்குள் அழைக்கக் கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண் +91 1800 309 3793 மற்றும் வாட்ஸ்-அப் எண் +91 9600023645 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
நேரில் அணுகியும் உதவி பெறலாம்
மேலும், nrtchennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், சென்னை சேப்பாக்கம் எழிலகம் அனெக்ஸ் கட்டிடத்தில் உள்ள ‘குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகத்தை’ நேரில் அணுகியும் உதவிகளைப் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














