மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பொழிவு. இடி, மின்னலுடன் மழை பொழிந்த காரணத்தால் நவராத்திரி கொண்டாட்டத்தில் இடையூறு. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மும்பை, பால்கர், தானே, ராய்காட், புனே மற்றும் பிற பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது. தானே, முலுண்ட், குர்லா, காட்கோபர், தாதர், வோர்லி, பாந்த்ரா, பிகேசி, போரிவலி, அந்தேரி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.11) கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அடுத்த 24 முதல் 48 மணி நேரம் வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை / இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.