கனமழை எதிரொலி: திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0
214

கனமழை காரணமாக திருவாரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்றும் மழை தொடர்கிறது. நவ.13-ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல், இன்று (நவ.8) திருவாரூர் உட்பட 13 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்திருந்தது. கூடவே இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here