‘அவர் என் மானேஜரே இல்லை’ – உன்னி முகுந்தன் விளக்கம்

0
206

மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீது, அவரது மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது.

இந்நிலையில், விபின் குமாரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உன்னி முகுந்தன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2018-ம் ஆண்டு நான் சொந்த படம் தயாரிக்க இருந்த போது விபின் குமார் தொடர்பு கொண்டார். பல பிரபலங்களின் பிஆர்ஓ என தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவரை என் தனிப்பட்ட மேலாளராக நான் நியமிக்கவில்லை. ‘மார்கோ’ படப்பிடிப்பின்போது அவரால் எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. பின்னர் தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் எனக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வது போல அவரை உடல் ரீதியாக தாக்கவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. நான் தாக்கியதாகக் குறிப்பிடும் இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here