Home சினிமா செய்திகள் கைவிடப்பட்டதா நானி – சிபி சக்கரவர்த்தி படம்?

கைவிடப்பட்டதா நானி – சிபி சக்கரவர்த்தி படம்?

0

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்படம் முதற்கட்டப் பணிகளிலேயே கைவிடப்பட்டது.

சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக சிவகார்த்திகேயன் – பேஷன் ஸ்டூடியோஸ் கூட்டணியின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தக் கதையை நானியிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அக்கூட்டணி உடனடியாக நடைபெறும் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தற்போது இப்படமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படம் பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் சிபி சக்கரவர்த்தியின் அடுத்த பட நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது.

‘ஹிட் 3’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் நானி. இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகிறது. மார்ச் 25, 2026-ல் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version