கடந்த 5 ஆண்டுகளில் அறநிலையத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி: 4,332 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக அரசு பெருமிதம்

0
17

வரலாற்​றில் இல்​லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டு காலத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு ரூ.1,190 கோடி நிதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2021 மே 7-ம் தேதி தமிழக முதல்​வ​ராக ஸ்டா​லின் பொறுப்​பேற்​றது தொடங்கி 2026 பிப்​.22 (நேற்​று) வரை, 20 முதல் 400 ஆண்​டு​களாக கும்பாபிஷேகம் நடை​பெறாத 4,332 கோயில்​களில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு கும்பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது.

மொத்​தம் 12,931 கோயில்​களில் ரூ.8,101 கோடி மதிப்​பீட்​டில் 29,479 திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதில் ரூ.4,346 கோடி மதிப்​பிலான 16,756 பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. மேலும், நன்​கொடை​யாளர் நிதி மூலம் ரூ.2,001 கோடி மதிப்​பீட்​டில் 12,220 பணி​கள் நடந்து வரு​கின்​றன. அதே​போல, 1,055 கோயில்​களுக்​குச் சொந்​த​மான ரூ.8,436 கோடி மதிப்​பிலான 8,107 ஏக்​கர் நிலங்​கள் ஆக்​கிரமிப்​பில் இருந்து மீட்​கப்​பட்​டுள்​ளன.

ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யினர் வாழும் பகு​தி​களில் உள்ள கோயில்​களுக்​கான திருப்​பணி நிதி​யுதவி ரூ.1 லட்​சத்​தில் இருந்து ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டு, 5,000 கோயில்​களுக்கு ரூ.106 கோடி நிதி​யுதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

1,000 ஆண்​டு​கள் பழமை​யான கோயில்​களை புனரமைத்து பாது​காக்​கும் சிறப்பு திட்​டத்​தின்​கீழ், அரசு நிதி ரூ.425 கோடி, கோயில் நிதி, நன்​கொடை​யாளர் நிதி, பொதுநல நிதி உட்பட மொத்​தம் ரூ.560 கோடி மதிப்​பீட்​டில் 352 கோயில்​கள் திருப்​பணிக்​காக எடுத்​துக் கொள்​ளப்​பட்​டன. அதில் 88 கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் உள்​ளிட்ட 10 முக்​கிய கோயில்​களில் ரூ.1,770 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் மற்​றும் பக்​தர்​களுக்​கான அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​தும் பணி​கள் பெருந்​திட்ட வரை​வின்​கீழ் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

21 கோயில்​களில் பயன்​பாடு இல்​லாத தங்க நகைகள் உள்​ளிட்​ட​ வற்றை மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்கி 1,074 கிலோ 123 கிராம் சுத்த தங்​கக் கட்​டிகளாக மாற்​றி, வங்​கி​களில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் கோயில்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.17.81 கோடி வரு​மானம் கிடைக்​கிறது.

கோயில்​கள் சார்​பில் ரூ.70 ஆயிரம் மதிப்​புள்ள சீர்​வரிசைகளு​டன் 2,800 இலவச திரு​மணங்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. ஒரு​கால பூஜை திட்​டத்​தில் உள்ள 19,000 கோயில்​களுக்​கான வைப்பு நிதி ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டு, இதற்​காக மட்​டும் ரூ.335 கோடி அரசு நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மொத்​தத்​தில், முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான 5 ஆண்​டு​கால ஆட்​சி​யில்​ இந்​து சமய அறநிலை​யத்​ துறைக்​கு, வரலாற்​றிலேயே இல்​லாத அளவுக்​கு ரூ.1,189.83 கோடி அரசு நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here