“அரசு வேலை, நிலம் வேண்டாம்” – ரூ.4 கோடியை தேர்வு செய்த வினேஷ் போகத் 

0
253

காமன்​வெல்த், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்​டி​யில் பங்​கேற்​றார். ஆனால், அரை இறு​திப் போட்​டி​யின் கூடு​தல் எடை காரணமாக அவர், தகு​திநீக்​கம் செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறு​வ​தாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடை​பெற்ற ஹரி​யானா சட்​டப் பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி கண்​டார்.

இந்​நிலை​யில், சர்​வ​தேச மல்​யுத்​தப் போட்​டிகளில் சாதனை படைத்​ததற்​காக அவரை கவுரவிக்க ஹரி​யானா முதல்​வர் நயாப் சிங் சைனி தலைமையி​லான பாஜக அரசு முடிவு செய்​தது. ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்​பு​களில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்​றும் அவர், விருப்​பத்​தின்​படி அரசு நடந்​து​கொள்​ளும் என்றும் முதல்​வர் நயாப்​ சிங்​ நைனி அறிவித்தார்.

ஹரி​யானா சட்​டப் பேர​வைக் கூட்​டத்​தொடரின்​போது சர்​வ​தேச போட்​டிகளில் பதக்​கம் வென்ற தனக்கு ஹரியானா அரசு வெகுமதி தரு​வ​தாக அறி​வித்​திருந்​தது. ஆனால், அதை இது​வரை செய்​ய​வில்லை என்று வினேஷ் போகத் கேள்வி எழுப்​பி​யிருந்​தார். அதைத் தொடர்ந்தே இந்த அறி​விப்பை முதல்வர் நயாப்​ சிங்​ நைனி வெளி​யிட்​டுள்​ளார்​.

இந்த நிலையில் அரசு வேலை, வீடு ஆகியவை தனக்கு வேண்டாம் என்றும், ரூ.4 கோடி பரிசை தான் பெற்றுக் கொள்வதாகவும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் விளையாட்டுக் கொள்கை நாட்டிலேயே மிகவும் தாராளமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையை ஹரியானா அரசு வழங்குகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here