சுதந்திர தினத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

0
92

அரசு மருத்​து​வர்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை சுதந்​திர தினத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு சுகா​தார குறி​யீடு​களில் தமிழக சுகா​தா​ரத் துறை முன்​னணி​யில் உள்​ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தொடர்ந்து 8-வது முறை​யாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்​துள்​ளது. ஆனால், தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களுக்​கு, நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் வழங்​கப்​படு​வது​ மிகுந்த வருத்​தமளிக்​கிறது.

சுதந்​திர இந்​தி​யா​வில் அரசு மருத்​து​வர்​களை தங்​கள் ஊதி​யத்​துக்​காக நீண்​ட​கால​மாக போராட வைக்​கும் ஒரே மாநில​மாக தமிழகம் உள்​ளது. வரும் 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்​று, முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்​டு​வந்த அரசாணை 354-ஐ அமல்​படுத்​தி, அதன் அடிப்​படை​யில் அரசு மருத்​து​வர்
​களுக்கு ஊதி​யம் வழங்​கப்​படும் என்ற அறி​விப்பை முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட வேண்​டும்.

கரோனா பேரிடரில் பணி​யாற்​றி, உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தனின் மனை​விக்கு அரசு வேலைக்​கான ஆணையை வழங்க வேண்​டும். அரசு மருத்​து​வ​மனை​களில் போதிய மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் பணி​யிடங்​கள் உரு​வாக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here