‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

0
174

 ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்​சிக்​காக கூகுள், யூனிட்டி நிறு​வனங்​கள் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம் இடையே துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்னிலையில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில், ஆண்​டு​தோறும் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் திறன்​சார்ந்த பயிற்​சிகள் பெற்று வரு​கின்​றனர். மேலும் தமிழக மாணவர்​களுக்​கான வேலை​வாய்ப்பை அதிகரிக்கும் வகை​யில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கல்​லூரி​களில் படிக்​கும் மாணவர்​களுக்​காக கூகுள் பிளே மற்​றும் யூனிட்டி கேம் டெவலெப்​பர் டிரைனிங் புரோகி​ராம் என்ற புதிய திட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டம், கூகுள் பிளே,​யூனிட்டி மற்​றும் முன்​னணி கேம்துறை​யினர் இணைந்து வழங்​கும் சிறப்பு திறன் பயிற்​சி​யாகும். இது கேம் டிசைன், டெவலப்​மென்ட் மற்​றும் மானிட்​டைசேஷன் ஆகிய​ தொழில்​நுட்ப திறன்​களை வழங்​கும். குறிப்​பாக கணினி அறி​வியல் துறை​யிலுள்ள இறு​தி​யாண்டு இன்​ஜினீயரிங் மாணவர்​களுக்​கும் மற்​றும் நடப்​பாண்​டில் உயர்​கல்வி முடித்த மாணவர்​களுக்​கும் இது சிறந்த வாய்ப்​பாகும்.

இலவச யூனிட்டி லைசென்​ஸ், இலவச பயிற்​சி, தேர்வு தயாரிப்பு அமர்​வு​கள், தொழில் நிபுணர்​களு​டன் சந்​திப்​பு, உரை​யாடல் வாய்ப்பு மற்​றும் ஸ்டார்ட்​-அப் ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு இன்க்​யூபெட்​டர் மற்​றும் முதலீடு​களுக்​கான வாய்ப்பு கிடைக்​கும். முதற்​கட்​ட​மாக 250 மாணவர்​களுக்கு பயிற்சி வழங்​கப்​பட​வுள்​ளது, ஒவ்​வொரு மாணவருக்​கும் தலாரூ.32,000 மதிப்புடைய யூனிட்டி லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி, சான்​றிதழ் வழங்​கப்​படும். இதன் மதிப்பு ரூ.80,32,500 ஆகும்.

இந்​நிலை​யில், தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்​னிலை​யில், ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் தமிழகத்​தைச் சேர்ந்த கணினி அறி​வியல் துறை​யிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறி​யியல் கல்​லூரி மாணவர்​களுக்​கான கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்சி திட்​டத்​துக்​காக கூகுள் மற்​றும் யூனிட்டி நிறு​வனத்​துக்​கும், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகத்​துக்​கும் இடையே ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்​நிகழ்​வில் கூகிள் பிளே பார்ட்​னெர்​ஷிப்ஸ் இயக்​குநர் குணால் சோனி, கூகுள் இந்​தியா பிளாட்​பார்ம்ஸ் மற்​றும் டிவைஸ், அரசாங்க விவ​காரங்​கள் மற்​றும் பொதுக் கொள்கை பிரிவு அதி​காரி அதிதி சதுர்​வே​தி, சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத்​துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​ கழக மேலாண்​மை இயக்​குநர்​ கிராந்​தி குமார்​ பாடி ஆகியோர்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here