நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்: நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

0
169

துஷார் சர்மா என்பவர் எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமனை டேக் செய்து, “நாட்டுக்காக உங்களது பங்களிப்புகளை, முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்புள்ளது. நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் வழங்க பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ள சவால்களை நான் புரிந்துகொள்கிறேன். எனினும், இது இதயப்பூர்வமான ஒரு வேண்டுகோள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் புரிதலுக்கும் நன்றி. உங்கள் அக்கறையை நான் உணர்ந்து பாராட்டுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, மக்களுக்கு பதிலளிக்கக்கூடிய அரசு. மக்களின் குரலுக்கு பிரதமர் மோடி செவிசாய்க்கிறார். உங்கள் கருத்து மதிப்புமிக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here