கவினின் ‘மாஸ்க்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
222

கவின் – ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

விக்ரணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’ எனத் தலைப்பிடப்பட்டது. இதனை வெற்றிமாறன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படம் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இப்படத்தினை ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் இணைந்து தயாரிப்பது தெரிகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை வழங்குகிறார். ‘மாஸ்க்’ மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த போஸ்டர்கள் மூலம் ஆண்ட்ரியா இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

‘மாஸ்க்’ படத்தில் கவின், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here