தயாரிப்பாளரிடம் ரூ.4.25 கோடி வாங்கிய விவகாரம்: கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

0
21

படத் தயாரிப்​பாளரிடம் முன்​பண​மாக வாங்​கிய ரூ.4.25 கோடியை திருப்​பிக் கொடுக்க வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

ஆர்​.எஸ்​.இன்​போடெ​யின்​மென்ட் என்ற நிறு​வனத்தை நடத்தி வரும் படத்​த​யாரிப்​பாள​ரான எல்​ரெட் குமார், கடந்த 2013-ல் திரைப்பட இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதி​ராக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

2008-ல் ஒப்பந்தம்

அதில், ‘நடிகர் சிம்பு என்ற டி.ஆர்​.சிலம்​பரசனை வைத்து தான் தயாரிக்​க​விருந்த படத்தை இயக்க கவுதம் வாசுதேவ் மேனனுடன் 2008-ல் ஒப்​பந்​தம் போட்​டிருந்​தேன்.

அதற்​காக ரூ.4.25 கோடியை முன்​பண​மாக வழங்​கினேன். ஆனால், அந்த ஒப்​பந்​தப்​படி படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்​கிக் கொடுக்​க​வில்​லை. வாங்​கிய பணத்​தை​யும் திருப்​பித் தரவில்​லை’ என கூறி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிப​தி, வாங்​கிய தொகை ரூ. 4.25 கோடியை படத்​த​யாரிப்​பாளரிடம் திருப்​பிக் கொடுக்க வேண்​டுமென கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கடந்த 2022-ல் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் கவுதம் வாசுதேவ் மேனன் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மேல்​முறை​யீட்டு மனு, நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், கே.ஜி.​தில​கவதி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

எதிர் மனு​தா​ர​ரான எல்​ரெட் குமார் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பி.ரமேஷ்​பாபு, ‘‘படத்தை இயக்​கிக் கொடுக்​க​வில்​லை, வாங்​கிய பணத்​தை​யும் திருப்​பித் தரவில்​லை’’ என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி​கள், தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

மேலும், வாங்​கிய ரூ.4.25 கோடியை கவுதம் வாசுதேவ் மேனன், வட்​டி​யுடன் சேர்த்​து வழங்​க வேண்​டும்​ என்​றும்​ உத்​தர​விட்​டுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here