ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ மார்ச் 27-ல் ரிலீஸ்

0
17

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் மரியா எழுதி, இயக்கியுள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜி.வி.பிரகாஷ் உடன் அப்பாஸ், ஸ்ரீ கெளரி பிரியா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here