உடல்நலம் குன்றியவர் இறந்ததாக கருதி உயிரோடு இருக்கும்போதே இறுதி சடங்குக்கு ஏற்பாடு

0
16

ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர் மாவட்​டம், ஆள்​ளூரு​பாடு கிராமத்தை சேர்ந்​தவர் வெங்​கடேஸ்​வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்​றி, கம்​மம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வெங்​கடேஸ்​வருலு​வின் உடல் நிலை மோச​மான​தால், அவர் கோமா நிலை​மைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். மருத்​து​வர்​கள் கைவிரித்​த​தால் ஆள்​ளூரு பாடு கிராமத்​தில் இறுதி சடங்​குக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. உற்​றார், உறவினர்​கள் வீட்டுக்கு வந்​தனர். வீட்​டின் முன் பந்​தல் போடப்பட்​டு, ஐஸ் பெட்டியும் வைக்​கப்​பட்​டது.

மருத்​து​வ​மனை​யில் இருந்து ஆம்​புலன்​ஸில் கொண்டு வரப்​பட்ட உடலை இறக்​கும்​போது, வெங்​கடேஸ்​வருலு​வுக்கு உயிர் இருப்​பது தெரிய​வந்​தது. உயிரோடு இருக்​கும்​போதே இறு​திச் சடங்​குக்கு ஏற்​பாடு செய்​ததை நினைத்து வருந்​திய உறவினர்​கள், அதே ஆம்புலன்​ஸில் அவரை மீண்​டும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

விஜய​வாடா மருத்​து​வ​மனைக்கு செல்​லும் வழி​யில் வெங்கடேஸ்வருலு உயி​ரிழந்​து​விட்​டார். பின்​னர் மருத்​து​வர்​கள் அவரை பரிசோ​தித்து உயி​ரிழப்பை உறுதி செய்​தனர். இதனிடையே இறு​திச் சடங்​குக்கு வந்​திருந்த உறவினர்​கள் அவரவர் வீடு​களுக்கு திரும்​பி​விட்​டனர். அவர்​களை மீண்​டும் அழைத்து வெங்​கடேஸ்​வருலு​வுக்கு நேற்று இறுதி சடங்​கு​கள்​ நடை​பெற்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here