‘சிக்கிய’ டேவிட் வார்னர் முதல் அமினுல் இஸ்லாம் நீக்கம் வரை | செய்தித் துளிகள்

0
18

> ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். சிட்னியின் மரூப்ரா பகுதியில் வாகன சோதனை செய்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக வார்னர், மது அருந்தியது கண்டறியப்பட்டது. அடுத்த மாதம் அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தால் பிஎஸ்எல் தொடரில் அவர், பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

> எகிப்தில் நடைபெற்று வரும் எல் கவுனா ஓபன் ஸ்குவாஸ் தொடரின் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர் அபய் சிங் 11-7, 9-11, 11-9, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான எகிப்தின் யூசுப் இப்ராஹிமிடம் தோல்வி அடைந்தார்.

> சீனாவின் நிங்க்போ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், காடே ருத்விகா ஷிவானி ஜோடி 13-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கோ சூன் ஹூவாத், லய் ஷெவோன் ஜெமி ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

> மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா 3-2 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்தமோவா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 48 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் மீனாக் ஷி ஹூடா 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரீயை வீழ்த்தி இறுதி சுற்றில் கால்பதித்தார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் 6 இந்திய வீராங்கனைகளும், ஆடவர் பிரிவில் 2 இந்திய வீரர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

> வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அமினுல் இஸ்லாம் புல்புல் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு தேசிய விளையாட்டு கவுன்சில் தற்போதைய வாரியத்தைக் கலைத்துவிட்டு, அன்றாட பணிகளைக் கவனிப்பதற்காக முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான தமீம் இக்பால் தலைமையில் 11 பேர் கொண்ட இடைக்கால குழுவை அமைத்துள்ளது.

> சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் சீனியர் டிவிஷன் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக காவல் துறை அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆக்டோபஸ் மரைன் அணியை தோற்கடித்தது. தளபதி ஸ்டாலின் – ஐசிஎஃப் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஐசிஎஃப் அணி சார்பில் ஆதில் 6-வது நிமிடத்திலும், தளபதி ஸ்டாலின் அணி தரப்பில் இளவரசன் 81-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

சென்னையின் எஃப்சி அதிர்ச்சி தோல்வி

ஐஎஸ்​எல் கால்​பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சென்​னை​யின் எஃப்சி – இன்​டர் காசி அணி​கள் மோதின. இதில் இன்​டர் காசி அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் ஆல்ஃப்​ரெட் 2 கோல்​கள் (46 மற்​றும் 54-வது நிமிடங்​கள்) அடித்து அசத்​தி​னார். சென்​னை​யின் எஃசி அணி தரப்​பில் சுக்வு 90+5-வது நிமிடத்​தில் கோல் அடித்​தார்​.

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஸ்பெயினின் கிரனடா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பாலக் குலியா, முகேஷ் நெலவல்லி ஜோடி 487.7 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. சீன ஜோடி வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரி ஜோடி வெண்கலப் பதக்கமும் பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here