சஞ்சய் காந்தி முதல் அஜித் பவார் வரை – விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்

0
50

ம​கா​ராஷ்டி​ரா​வில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் அம்​மாநில துணை முதல்​வரும் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சித் தலை​வரு​மான அஜித் பவார் உயி​ரிழந்​தார். இந்​தி​யா​வில் நடை​பெற்ற விமான மற்​றும் ஹெலி​காப்​டர் விபத்​துகளில் முதல்வர்​கள், அமைச்​சர்​கள், முப்​படை தளபதி உள்​ளிட்ட பல தலை​வர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​துள்​ளனர். அதுபற்றி பார்க்கலாம்.

விஜய் ருபானி (2025): குஜ​ராத் முன்​னாள் முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் ருபானி கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்​தியா விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். குஜராத்​தின் அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட சிறிது நேரத்​தில் இயந்​திரக் கோளாறால் விபத்​தில் சிக்​கிய அந்த விமானத்​தில் பயணித்த ஒரு​வர் தவிர 241 உயி​ரிழந்​தனர்.

ஜெனரல் பிபின் ராவத் (2021): நாட்​டின் முதல் முப்​படைத் தளப​தி​யான பிபின் ராவத், கடந்த 2021ம் ஆண்டு டிசம்​பர் 8ம் தேதி தமிழ்​நாட்​டின் குன்​னூர் அருகே மோச​மான வானிலை​யால் நிகழ்ந்த ஹெலி​காப்​டர் விபத்​தில் உயி​ரிழந்​தார். அவருடன் பயணித்த மனைவி மற்​றும் 12 பேர் உயி​ரிழந்​தனர்.

டோர்ஜி காண்டு (2011): அருணாச்சல பிரதேச முன்​னாள் முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த 2011ம் ஆண்டு ஏப்​ரல் 30ம் தேதி பயணம் செய்த ஹெலி​காப்​டர் மாய​மானது. அடுத்த சில தினங்களில் சீன எல்லை அருகே அந்த ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்​கியது தெரிய​வந்​தது. இதில் டோர்ஜி உயி​ரிழந்​தார்.

ஒய்​.எஸ்​.​ராஜசேகர ரெட்டி (2009): ஒருங்​கிணைந்த ஆந்​திர முதல்வ​ராக இருந்த ஒய்​.எஸ்​.ஆர். கடந்த 2009 செப்​. 2ம் தேதி பயணித்த ஹெலி​காப்​டர் கனமழை காரண​மாக வனப்​பகு​தி​யில் விழுந்து நொறுங்​கிய​தில் உயிரிழந்​தார்.

ஓ.பி.ஜிண்​டால், சுரேந்​தர் சிங் (2005): ஹரி​யானா மின்துறை அமைச்​சர் ஓ.பி.ஜிண்​டால், வேளாண் துறை அமைச்​சர் சுரேந்​தர் சிங் ஆகிய இரு​வரும் 2005ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பயணம் செய்த ஹெலி​காப்​டர் தொழில்​ நுட்​பக் கோளாறு காரண​மாக உ.பி.​யின் சஹாரன்​பூரில் விபத்​துக்​குள்​ளானது. இதில் இரு​வரும் உயி​ரிழந்​தனர்.

ஜிஎம்சி பாலயோகி (2002): மக்​களவை சபா​நாயக​ராக இருந்த ஜிஎம்சி பாலயோகி, கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பயணம் செய்த ஹெலி​காப்​டர் ஆந்​தி​ரா​வில் விபத்​தில் சிக்​கிய​தில் உயி​ரிழந்​தார். மோச​மான வானிலையே இந்த விபத்​துக்​குக் காரணம்.

மாதவ் ராவ் சிந்​தியா (2001): காங்​கிரஸ் மூத்த தலை​வரும் முன்னாள் மத்​திய அமைச்​சரு​மான மாதவ ராவ் சிந்​தி​யா, 2001ம் ஆண்டு செப்​.30ம் தேதி உ.பி. மாநிலம் மெயின்​புரி அருகே விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். இந்த விபத்தில் 8 பேர் உயி​ரிழந்​தனர்.

சஞ்​சய் காந்தி (1980): முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் மகன் சஞ்​சய் காந்​தி, 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி டெல்லி சப்தர்​ஜங்​ வி​மான நிலை​யம்​ அரு​கே நிகழ்ந்​த வி​மான விபத்​தில்​ உயிரிழந்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here