Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை: விபத்தில் கல்லூரி மாணவர்  உட்பட 3 பேர் காயம்

வெள்ளிச்சந்தை: விபத்தில் கல்லூரி மாணவர்  உட்பட 3 பேர் காயம்

0

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கமலேஷ் (19). சம்பவ தினம் இவரும் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த இவரது நண்பரான கல்லூரி மாணவர் ராஜன் (21) என்பவரும் பைக்கில் திங்கள் நகருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இரணியல் வழியாக நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை கமலேஷ் ஓட்டினார். 

ராஜன் பின்னால் அமர்ந்திருந்தார். வெள்ளி சந்தை அருகே உள்ள உன்னங்குளம் என்ற பகுதியில் செல்லும் போது முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்ற பைக் மீது கமலேஷ் பைக் மோதியது. இந்த விபத்தில் மூன்று பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கமலேஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முருகேசன் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ராஜன் சிறுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version