கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தில் நாளை (செப். 21) இந்திய கலங்கரை விளக்க தினத்தையொட்டி ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கன்னியாகுமரி கலங்கரை விளக்க பொறுப்பாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.