Home தேசிய செய்திகள் அரசு அதிகாரி தற்கொலை வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

அரசு அதிகாரி தற்கொலை வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

0

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மாநில கிடங்கு நிறுவனத்தின் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர் ககன்தீப் சிங் ரந்தவா. இவர் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக அவர் தனது வீடியோ பதிவில் போக்குவரத்து அமைச்சர் புல்லர் தன்னை துன்புறுத்தி வந்ததாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து முதல்வர் பகவந்த் சிங் மான் கேட்டுக்கொண்டுதற்கு இணங்க புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் லால்ஜித் சிங் புல்லர் நேற்று பிற்பகலில் கைது செய்யப்பட்டார்.

அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா நேற்று மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கம் கோரிய 2 மணி நேரத்தில் புல்லர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா, “பஞ்சாபை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளித்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version