Home தேசிய செய்திகள் ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரம்மோஸ் வாங்க உலக நாடுகள் விருப்பம்’

‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரம்மோஸ் வாங்க உலக நாடுகள் விருப்பம்’

0

இந்​தி​யா​விடம் இருந்து பிரம்மோஸ் ஏவு​கணை​களை வாங்க பல்​வேறு உலக நாடு​கள் விருப்​பம் தெரி​வித்​துள்ளன என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலை​மைச் செயல் அதி​காரி தெரிவித்துள்​ளார்.

இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இணைந்து பிரம்​மோஸ் என்ற சூப்​பர்​சானிக் ஏவு​கணை​களை தயாரித்து வரு​கின்​றன. இரு நாடு​களின் கூட்டு நிறு​வன​மான பிரம்​மோஸ் ஏரோஸ்​பேஸின் தலை​மைச் செயல் அதி​காரி ஜெய்​தீர்த் ராகவேந்​திர ஜோஷி கூறிய​தாவது: கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்​தான் தீவிர​வாத அமைப்பு​களுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போது பாகிஸ்​தானில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் மூலம் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன. பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்​கள் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் மூலம் தகர்க்​கப்​பட்​டன. எதிரி​களின் ரேடார்​களின் கண்​காணிப்பை தாண்டி இந்த ஏவு​கணை​கள் மிகத் துல்​லிய​மாக இலக்​கு​களைத் தாக்​கின. இதுகுறித்து உலகம் முழு​வதும் விவாதிக்கப்​பட்டு வரு​கிறது.

ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு சர்​வ​தேச அளவில் பிரம்​மோஸ் ஏவுகணை மிகப்​பெரிய வரவேற்​பைப் பெற்​றிருக்​கிறது. இந்த ஏவுகணையை வாங்க பல்​வேறு உலக நாடு​கள் விருப்​பம் தெரிவித்​துள்​ளன. இந்​தி​யா​விடம் இருந்து முதல் நாடாக பிலிப்​பைன்​ஸ், பிரம்​மோஸ் ஏவு​கணை​களை வாங்கி உள்​ளது. அடுத்ததாக வியட்​நாம், இந்​தோ​னேசியா உள்​ளிட்ட நாடுகளுக்கும் விரை​வில் இந்த ஏவு​கணை​கள் விற்​பனை செய்யப்பட உள்​ளன.

இந்​தி​யா​விடம் இருந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​யைப் பெற ரஷ்யாவும் விருப்​பம் தெரி​வித்​திருக்​கிறது. இதுதொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. அடுத்த தலை​முறை பிரம்​மோஸை தயாரிக்​கும் பணி​யிலும் தீவிர​மாக ஈடு​பட்டு உள்​ளோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version