ஸ்ரீநகர் மத்திய சிறை கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி நியமனம்

0
11

ஸ்ரீநகர் மத்​திய சிறை​யின் கண்​காணிப்​பாள​ராக முதன்​முறை​யாக பெண் அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இது தொடர்​பாக கடந்த திங்​கட்​கிழமை மாலை வெளி​யான அரசு உத்​தர​வின்​படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்​வேறு சிறை​களுக்கு 4 அதி​காரி​கள் கண்​காணிப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். இவர்​களில் ஸ்ரீநகர் மத்​திய சிறைக்​கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதி​காரி சபா ஷாலுக்கு வழங்​கப்​பட்​டது. சபா ஷால் இந்த நியமனத்​துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை தலைமை இயக்​குநர் அலு​வல​கத்​தில் பணி​யாளர் அதி​காரி​யாக பணியாற்றினார்.

ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை​யில் மக்​கள் தொடர்பு அதிகாரியாக​வும் அவர் பணி​யாற்​றி​யுள்​ளார். ஸ்ரீநகரில் வசதியான மக்​கள் வசிக்​கும் பிர் பாக் பகு​தி​யில் வசிக்​கும் சபா ஷால், சமூகப் பணி​யில் முதுகலைப் பட்​டம் பெற்​றுள்​ளார். கடந்த 2012ல் காஷ்மீர் அரசுப் பணி​கள் தேர்​வாணைய தேர்​வில் தேர்ச்சி பெற்​றார்.

இவரை அறிந்த அதி​காரி​கள் கூறுகை​யில், “சபா ஷால் தனது பணி​யில் நன்கு தேர்ச்சி பெற்​றவர். நிறைந்த அனுபவம் கொண்டவர். இருப்​பினும் இது அவருக்கு ஒரு சவாலான பணியாகவே இருக்​கும். என்​றாலும் சிறைத் துறையை அவர் நன்கு அறிந்​தவர் என்​ப​தால் திறம்பட பணி​யாற்​று​வார் என நம்புகிறோம்” என்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பழமை​யான சிறை​களில் ஸ்ரீநகர் சிறை​யும் ஒன்​றாகும். அரசி​யல் கைதி​கள் உட்பட 900-க்​கும் மேற்​பட்​டோர் இங்கு அடைக்​கப்​பட்​டுள்​ளனர். காவல் துறை மட்​டுமின்றி மத்​திய தொழிலக பாது​காப்பு படை​யும் இதற்கு பாது​காப்பு அளிக்​கிறது.

கடந்த காலங்​களில் வெளி​ நாட்டு தீவிர​வா​தி​கள், பிரி​வினை​வாத தலை​வர்​கள் பலர் இந்த சிறை​யில் இருந்​தனர். பிறகு இவர்​களில் பெரும்​பாலானோர் கோட் பல்​வால், ஜம்மு உள்​ளிட்ட நகரங்​களில் உள்​ள சிறை​களுக்​கு மாற்​றப்​பட்​டனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here