Home மாநில செய்திகள் தமிழகம் முழுவதும் பிப்.9-ல் தீ விபத்து தடுப்பு பயிற்சி

தமிழகம் முழுவதும் பிப்.9-ல் தீ விபத்து தடுப்பு பயிற்சி

0

தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் விபத்து இடத்துக்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வழங்க உள்ளது.

இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளி, அடுக்குமாடி குடியிருப்பு, ஓட்டல், திரையரங்கம், வணிக வளாகம், தொழிற்சாலை போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாப்பு காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிப்.9-ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை இந்த பயிற்சி வழங்கப்படும். எனவே, தங்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு தீயணைப்பு நிலையங்களில் பாதுகாப்பு காவலர்கள் கலந்து கொள்ளும்படி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரும், டிஜிபி.யுமான சீமா அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version