அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை 12-10, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பிஎஸ்ஏ சுற்றுப்பயண தொடரில் அனஹத் சிங் கோப்பையை வெல்வது இது 15-வது முறையாகும். உலகத் தரவரிசையில் 31-வது இடத்தில் இருந்த அனஹத் சிங் தற்போதைய வெற்றியின் மூலம் 19-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.



